இதழ் - 106 இதழ் - ௧0௬
நாள் : 05-05-2024 நாள் : 0ரு-0ரு-௨௦௨௪
ஆத்திசூடி (ஔவை)
” ஊருடன் கூடிவாழ் ”
நன்மை தீமைகளில் ஊருடன் கூடி வாழ்.
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 103
ஊருந்தா யுஞ்சரியே யூரையன்றி யேதனிவாழ்ந்
தாருந்தா யைத்தனிவாழ்ந் தாருமொப்பர் – பாரின்பால்
பொன்னூரும் புன்னைவன பூபாலா நீயிதெண்ணி
மன்னூ ருடன்கூடி வாழ்
உரை
பொற்செல்வம் நிறைந்த புன்னைவன பூபாலா! ஒருவனுடைய ஊரும் அவனது தாயும் ஒப்பானவர்களே. ஊரைவிட்டுத் தனியாக வாழ்பவர்கள் தாயைவிட்டுத் தனியாக வாழ்வாருக்கு ஒப்பானவர்கள். ஆதலால் நீ இதை உள்ளத்துள் எண்ணி இவ்வுலகத்தில் ஊருடன் சூடி வாழ்வாயாக.
விளக்கம்
பார் – உலகம். மன் – நிலையான. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் ஒன்று என்பது வலியுறுத்தப்படுகிறது. அதனை “ஊருந்தா யுஞ்சரியே” என்றார்.
கருத்து
ஊர்மக்களுடன் கூடி வாழ வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment