பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 106                                                                                                 இதழ் - 0
நாள் : 05-05-2024                                                                                 நாள் : 0ரு-0ரு-௨௦௨


பழமொழி – 106

“ உண்டஇல் தீயிடு மாறு ”

விளக்கம்
    நண்பர்களின் உதவியை மறந்து அவர்களைப்பற்றி புறங்கூறித் திரிவது உண்ட வீட்டில் நெருப்பை உண்டாக்குவது என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

            பண்டினர் என்று தமரையும் தம்மையும்
            கொண்ட வகையால் குறைதீர நோக்கியக்கால்
            விண்டவரோ(டு) ஒன்றிப் புறனுரைப்பின் அஃதால்
            'உண்டஇல் தீயிடு மாறு'
          
    ஒருவன் வறுமையின் பிடியில் இருப்பதை அறிந்த உறவினர் ஒருவர் அவரின் வறுமையைப் போக்க உதவி செய்கிறார். உதவியைப் பெற்ற அந்த உறவினன் வறுமை தீர்ந்த பின்னர் அந்நண்பரைப் பற்றி குறைகூறிக்கொண்டும் புறங்கூறித் திரிந்து கொண்டிருந்தான் என்றால் அச்செயல், உண்டு பயன்பெற்ற வீட்டிற்கு நெருப்பை வைப்பதற்கு ஒப்பான செயல் என்பதை விளக்கவே 'உண்டஇல் தீயிடு மாறு' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

    மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment