இதழ் - 193 இதழ் - ௧௯௩
நாள் : 01 / 03 / 2026 நாள் : 0௧ / 0௩ / ௨௦௨௬
தும்பைப்படலம்
11. நூழில்
பகைவரின் மார்பை பிளந்த மறவன் தன் மகிழ்ச்சியின் காரணமாக போர்க்களத்தில்
வேலினை கீழும் மேலுமாக சுழற்றி ஆடியது.
12. நூழில் ஆட்டு
தும்பை மறவன் ஒருவன் எறிந்த வேலானது பகைவனின் மார்பைப் பிளந்தது.
அவ்வேலினைப் பறித்து பகைவர்கள் போர்க் களத்தைவிட்டு ஓடும்படியாக வீசியது.
13. முன்தேர்க் குரவை
தும்பை மறவர்கள் தம் அரசனின் தேருக்கு முன் நின்று குரவைக் கூத்தினை ஆடுவது.
14. பின்தேர்க் குரவை
தும்பை மறவர்களும் விறலியரும் தம் அரசனின் தேருக்கு பின் நின்று குரவைக்
கூத்தினை ஆடுவது.
15. பேய்க் குரவை
தும்பை அரசனின் தேருக்கு முனனும் பின்னும் பேய் மகள் நின்று ஆடுவது.
16. களிற்றுடனிலை
தன்னால் வீழ்த்தப்பட்ட யானையின் கீழ் வீழ்ந்து மறவன் ஒருவன் அதனுடன் ஒருங்கே
இறப்பது.
17. ஒள்வாள் அமலை
போரில் இறந்த பகையரசனைச் சூழ்ந்து நின்று தும்பை மறவர்கள் வாளினை வீசி
ஆடுவது.
18. தானைநிலை
இருபக்கத்து மறவர்களும் தன் புகழைப் பேசும்படி மறவன் ஒருவன் மேம்பட்டு நிற்றலைச்
சிறப்பித்துக் கூறுவது.
19. வெருவெருநிலை
ஒருவனுடைய உடலை துளைத்த அம்புகள் அவனை நிலத்தில் விழாதபடி தடுத்து நிற்பது.
20. சிருங்கார நிலை
போர்க்களத்தில் இறந்து கிடக்கும் மறவனது உடலை அவன் மனைவி தழுவிநிற்பது.
21. உவகைக் கலுழ்ச்சி
விழுப்புண்பட்டு இறந்த கணவனைக் கண்டு அவன் மனைவி மகிழ்ந்து கண்ணீர்
சிந்துவது.
22. தன்னை வேட்டல்
தன் அரசன் போர்க்களத்தில் இறந்ததைக் கேட்ட மறவன் அப்போர்க்களத்திலே
உயிரை விடுதல் மற்றும் களத்தில் இறந்த கணவனைக் காண மனைவி வருதல்.
23. தொகைநிலை
இரு நாட்டு அரசாகளும் இறந்துபட அவர்தம் போர் மறவர்கள் மட்டும் தொடர்ந்து
போர்செய்து இறப்பது.
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020

No comments:
Post a Comment