பக்கங்கள்

இதழ்-2 இலக்கணம் கற்போம்

இதழ்–2                                                                         இதழ் - உ
நாள் : 8-5-2022                                                            நாள் : அ-ரு-௨௰உஉ
 
 
இலக்கணத்தின் வகைகள்

     தமிழ்மொழி மூன்று பெரும் பிரிவுகளை உடையது. அவை இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ். இவையே முத்தமிழ் என்று வழங்கப்படுகின்றது. முத்தமிழுக்கும் இலக்கணம் கூறும் முதல் நூல் அகத்தியம் என்ற பழந்தமிழ் நூல் ஆகும்.

தமிழ் இலக்கணம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 
அவை,
1. எழுத்திலக்கணம்
2. சொல்லிலக்கணம்
3. பொருள் இலக்கணம்
4. யாப்பு இலக்கணம்
5. அணி இலக்கணம்

எழுத்திலக்கணம்
 
   தமிழில் எழுத்திலக்கணம் என்பது, தமிழ் மொழியில் பயன்படுத்தப்படும் எழுத்துகளுக்கான இலக்கணம் ஆகும். 
 
பொதுவாக எழுத்து என்பது என்ன? 
 
    எழுத்தின் பிறப்பு, அதன் வகைகள், எழுத்துகளின் மாத்திரை அளவு, எழுத்துகளின் புணர்ச்சி, புணர்ச்சியில் ஏற்படும் எழுத்துகளின் மாற்றம் ஆகியன எழுத்திலக்கணத்தில் கூறப்படுகிறது .

எழுத்திலக்கணப் பிரிவுகள் 

      தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை 9 உட்பிரிவுகளாகவும், நன்னூல் 12 பிரிவுகளாகவும் பிரித்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் தோன்றிய வீரசோழியம், நேமிநாதம் ஆகிய நூல்கள் எவ்வித உட்பிரிவுமின்றி ஒரே இயலில் கூறியுள்ளன.

      அனைத்து மொழிகளிலும் அகரம் முதல் எழுத்தாக இருப்பதால், அகரம் தொடங்கி எழுத்துகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. தனித்தனி எழுத்துகள்  சேர்ந்து சொற்கள் ஆக்கப்படும். மொழிகளுக்கு இவ்வரிசை அடிப்படையான ஒன்று.  இதனை தமிழில் நெடுங்கணக்கு என்று கூறுவர்.

தமிழில் எழுத்துகள் அமைந்த முறை
உயிர் எழுத்துகள்       - 12
மெய் எழுத்துகள்       - 18
உயிர்மெய் எழுத்துகள்  - 216
ஆய்த எழுத்து         - 1
 
மொத்த எழுத்துகள்    - 247

உயிர் எழுத்துகள்   (12)

அ     ஆ     இ     ஈ     உ     ஊ     எ     ஏ     ஐ     ஒ     ஓ     ஔ

மெய்யெழுத்துகள்  (18)

க்   ங்   ச்   ஞ்   ட்   ண்   த்   ந்   ப்   ம்   ய்   ர்   ல்  வ்   ழ்   ள்   ற்   ன்

உயிர் மெய் எழுத்துகள்  (216)
 
 
ஆய்த எழுத்து  (1)


( தொடர்ந்து கற்போம் . . . )


 

No comments:

Post a Comment