பக்கங்கள்

இதழ்-2 தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ்–2                                                                         இதழ் - உ
நாள் : 8-5-2022                                                            நாள் : அ-ரு-௨௰உஉ


1.  கோயம்புத்தூர் – கோவன்புத்தூா், கோசம்புத்தூர்


      கோயம்புத்தூர் பெயர் மருவி வழங்கப்பட்டு வருவதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.
 
     வெள்ளாளர்கள் பலர் புது ஊர்களைத் தோற்றிவித்துள்ளனர். இவர்களில் பலர் கோவன் என்ற பெயர் கொண்டவராக இருந்தனர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட புதிய ஊரான புத்தூர் தான் கோவன் புத்தூர். அவ்வூர் பெயார் மருவி கோயம்புத்தூர் என்று ஆயிற்று.
 
      கோசர் என்னும் பழமையான இனக்குழு மக்கள் கொங்குநாட்டுப் பகுதியான இப்பகுதியைத் தலைமையிடமாக வைத்து ஆட்சி செய்து வந்துள்ளனர். அம்மக்கள் வாழ்ந்த இப்பகுதி கோசம்புத்தூர் என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்பெயர் நாளடைவில் மருவி கோயம்புத்தூர் என்று வழங்கப்படுகிறது.

2.  சிதம்பரம் – பெரும்பற்றப்புலியூா் – தில்லை


        புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் இறைவன் மீது கொண்ட பெரும்பற்றினால் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியமையால் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர் பெற்றது. 
 
         இவ்வூரின் நடுநாயகமாக, தில்லை நடராஜர் கோவில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் இவ்விடம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக விளங்கியதால் தில்லைவனம் என்றும், இறைவன் அம்பலத்தில் ஆடல் புரிதலால் சிற்றம்பலம் என்றும், அதுவே சிதம்பரம் என்று ஆயிற்று. 
 
        சிதம்பரம் என்ற பெயர் வர காரணம், “சித்தம் - இதயம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித்தம்+அம்பரம் - சிதம்பரம். இந்த ஊர்ப்பெயர் காலப்போக்கில் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக சிதம்பரம் என்று மாறிவிட்டது.

3.  சிவகங்கை – சிவனது கங்கை, செவ்வேங்கை

        சசிவர்ண தேவர் தனது குரு முனிவர் சாத்தப்பையா தியானம் செய்த இடத்திற்கு அருகிலிருந்த நீர் ஊற்றை விரிவுப்படுத்தி, அதை பெரிய அகலமான தெப்பக்குளமாக உருவாக்கினார். அக்குளம் சிவனது கங்கை என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அப்பெயா் மருவி பின்னாளில் சிவகங்கை எனப் பெயர் பெற்றது.

        செவ் வேங்கையைச் சசிவர்ண தேவர் கொன்றதால் செவ்வேங்கை என்ற பெயர் மருவி பின்னாளில் சிவகங்கை என அழைக்கப்படுகிறது.

4. 4. செங்கல்பட்டு – செங்கழுநீர்ப்பட்டு


        பழங்காலத்தில் இப்பகுதியில் பாலாறு பாய்ந்து வரும் கரையோரமும், இங்குள்ள கொலவை ஏரியிலும், மற்றுமுள்ள நீர்நிலைகளிலும் செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்தன. அதனால் இவ்வூர் செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. பின்னாளில் அப்பெயர் மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படலாயிற்று.

 5.  மதுரை – மலைதுரை, மலைத்துவசத்துரை


        மதுரை நகரம் பழங்காலத்தில் மலைகள் மிகுந்த பகுதியாக இருந்ததால்  மலைதுரை என்ற பெயரில் அழைக்கபெற்றது. பின்னாளில் அப்பெயர் மருவி மலைதுரை ம+(லை)+துரை மதுரையாக மாறியுள்ளது.
 
        மலைத்துவசபாண்டியன் என்ற அரசன் மலைதுரையை ஆண்டு வந்துள்ளார். அவரது திருப்பெயரால் மலைத்துவசத்துரை என்ற பெயர் மருவி இன்று மதுரையாக வழங்கப்படுகிறது. சிவபெருமானின் தலையிலிருந்து பொழிந்த மதுரம் (அமிழ்தம், தேன்) இவ்வூரில் விழுந்ததால் மதுரை எனப்பெயர் பெற்றது.
 
        மதுரை என்ற ஊர் மலை நகரம், மதுராநகர், தென் மதுராபுரி, கூடல், முக்கூடல் நகரம், பாண்டிய மாநகர், மல்லிகை மாநகர், மல்லிநகரம், வைகை நகரம், நான்மாடக்கூடல், திரு ஆலவாய், சுந்தரேசபுரி, மீனாட்சி நகரம் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது.

 

( தொடர்ந்து அறிவோம் . . . )

 

 

No comments:

Post a Comment