பக்கங்கள்

இதழ்-2 பழமொழி அறிவோம்

இதழ்–2                                                                         இதழ் - உ
நாள் : 8-5-2022                                                            நாள் : அ-ரு-௨௰உஉ
  

 பழமொழி - 2

'அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு'

       ஆரவார மிகுந்த கடைத் தெருவிலே மேய்ந்த பழைய கன்று ஒன்று, பின் ஒரு காலத்தில்  வளர்ந்து எருதாகிச் சிறப்படைதலும் உண்டு என்பது இப்பழமொழியின் விளக்கமாகும். (ஏறு – காளை)

உள்ளூர் அவரால் உணர்ந்தாம் முதலெனினும்
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய் !  - தள்ளாது
அழுங்கல் முதுபதி அங்காடி மேயும்
பழங்கன்று ஏறாதலும் உண்டு

    ஒருவனின் கையில் சிறிதளவு முதலே உள்ளது எனினும் அதை நினைத்து அவன் வருந்தாமலும், ஊரார் நகைக்கின்றனர் என மனம் தளராமலும், விடாமுயற்சி செய்து தன்னை இகழ்ந்த ஊரார் புகழும்படி வாழ்ந்து காட்ட முயற்சி செய்ய வேண்டும். அதுவே சிறப்பாகும். இது ஆரவாரம் மிகுந்த கடைத் தெருவிலே மேய்ந்த பழைய கன்று, பின் ஒரு காலத்தில்  வளர்ந்து எருதாகிச் சிறப்படைவது எவ்வாறோ அதை ஒத்ததாகும் என இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.


( தொடர்ந்து அறிவோம் . . . )

 
 

No comments:

Post a Comment