ஆத்திசூடி (ஔவை)
” சீர்மை மறவேல் ”
உரை புகழுக்குக் காரணமான ஒழுக்கத்தை மறவாதே.
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 46
உற்றதொடைப் புண்ணுக் குடைகீறிக் காட்டிநின்றான்
கொற்றவன்மு னுன்கங்கை கோத்திரத்தான் – வெற்றிபுனை
மன்னான புன்னைவன வள்ளலே யாதலினால்
எந்நாளுஞ் சீர்மைமற வேல்
உரை விளக்கம் :
வெற்றியினைப் புனைந்திருக்கும் புன்னைவன வள்ளலே! தனக்குத் தொடையிலுற்ற புண்ணுக்கு உடையினைக் கீறி மன்னவன்முன் கங்கைகோத்திரத்தான் காட்டிநின்றான். ஆதலினால் எந்நாளும் ஒழுக்கத்தை மறவாதே.
விளக்கம் :
கொற்றவன் – வெற்றியையுடை மன்னவன். இப்பாடலில் குறிப்பிடப்படும் தொடைகீறிக் காட்டிநின்ற கங்கை கோத்திரத்தான் யாரென்று புலப்படவில்லை. இதில் குறிப்பிடப்படும் எடுத்துக்காட்டு இன்னதென்றும் புலப்படவில்லை. இலக்கைப் பதிப்பிலும் இக்கதை குறித்த குறிப்பில்லை.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment