இதழ் - 49 இதழ் - ௪௯
ஆத்திசூடி (ஔவை)
” சுளிக்கச் சொல்லேல் ”
உரை
மிகவுரைத்துத் தன்னுயிரும் வீந்த – நகைபார்
மனுநெறிதேர் புன்னை வனநாதா யாவ
ரெனினுஞ் சுளிக்கச்சொல் லேல்.
கேட்பவர் வெறுப்பும் சினமும் கொள்ளும் வகையில் பேசாதே.
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 47
சகுனிதுரி யோதனற்குச் சர்ப்பனையாகக் கேடுமிகவுரைத்துத் தன்னுயிரும் வீந்த – நகைபார்
மனுநெறிதேர் புன்னை வனநாதா யாவ
ரெனினுஞ் சுளிக்கச்சொல் லேல்.
உரை விளக்கம் :
மனுநெறியாகிய நீதியிற் தேர்ந்த புன்னைவன நாதனே! சகுனி துரியோதனற்கு வஞ்சனையாக கேடுபயப்பனவற்றை மிகவும் சொல்லி வந்தமையால் பாண்டவர்களுடன் குருச்சேத்திரிப் போர்மூண்டு துரியோதனாதியர்களுடன் அவனும் இறந்தான். இது நகைப்பிற்குரியது. ஆதனால் யாராயினும் அவர்கள் சினமோ வெறுப்போ கொள்ளும் விதமாக எச்சொல்லையும் சொல்லாதே.
விளக்கம் :
சகுனி – கௌரவர் தலைவனான துரியோதனனின் மாமன், காந்தாரியின் அண்ணன். அவன் தனது தங்கை மகனாகிய துரியோதனன் உள்ளத்தில் பாண்டவர்கள் குறித்து வஞ்சனையை தன் சொல்வன்மையால் புகுத்தினான். அதனால் போர்மூண்டு அவனும் உயிர்விடுபடியாயிற்று என்பதை “தன்னுயிரும் ஈந்த” என்றார். சர்ப்பனை – வஞ்சகம். நகைபார் என்றது யாரும் தன்னுயிருக்குக் கேடு விளைவிக்கும் செயலில் ஈடுபட மாட்டார்கள் என்பதால். நீதிநெறி அறிந்தவர் புன்னைவன நாதன் என்பதை “மனுநெறி தேர் புன்னைவன நாதா” என்றார். சுளித்தல் – முகம் சுளித்தலோடு உள்ளம் சுளித்தலும் எனலாம்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment