இதழ் - 67 இதழ் - ௬௭
நாள் : 06-08-2023 நாள் : 0௬-0அ-௨௦௨௩
ஆத்திசூடி (ஔவை)
” நன்மை கடைப்பிடி ”
உரை
நற்செயல்கள் செய்வதில் உறுதியாக இரு.
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 65
அரசமரந் தொல்கடனீந் தந்தணனைக் கால
புரவழியிற் காத்த புகழின் – பெருமையைப்பார்
மன்றலந்தார்ப் புன்னைவன வள்ளலே யார்க்கும்
என்றுநன் மைகடைப் பிடி
புரவழியிற் காத்த புகழின் – பெருமையைப்பார்
மன்றலந்தார்ப் புன்னைவன வள்ளலே யார்க்கும்
என்றுநன் மைகடைப் பிடி
உரை
மற்றவர்களின் துன்பம் துடைக்கும் புன்னை வனவள்ளலே! அரச மரம் பழமையான கடலை நீந்தும் அந்தணனைக் காலன்தம் வழியினின்று காத்த செயலின் பெருமையைப் பார்ப்பாயாக. ஆதலால் நீயும் என்றும் நற்செயல்களில் உறுதியாக ஈடுபடு.
விளக்கம்
அலந்த – துன்பமுற்ற. இவ்வெண்பாவில் வரும் கதை யாதென்று புலப்படவில்லை.
கருத்து
நற்செயல்களில் தொடர்ந்து உறுதியுடன் ஈடுபட வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment