பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 199                                                                              இதழ் - ௧
நாள்  :  03 / 05 / 2026                                                        நாள்   :  0 / 0 / ௨௦௨


 


ஆறும் குளமும் பெயரால் எழுந்த ஊர்கள்

திருச்சோற்றுத் துறை

    சோழநாட்டிலுள்ள சிறப்புப் பெற்ற தலங்களில் ஒன்று திருச்சோற்றுத் துறை. “சோழ நாடு சோறுடைத்து” என்னும் புகழுரைக்குச் சான்றாக நிற்பது இச்சோற்றுத்துறையாகும். தேவாரப் பாமாலை பெற்ற இப்பழமையான துறையைச் சேக்கிழார், "பொன்னித் திரை வலங்கொள் சோற்றுத்துறை" என்று பாராட்டினார்.
 
    பழங்காலத்தில் இருவகை வழக்கிலும் ஏற்றமுற்று விளங்கிய சோறு என்னும் சொல் பிற்காலத்தில் எளிமையுற்றது. சாதம் என்பது சோறு என்ற சொல்லைவிட சிறப்புடைய சொல்லாகக் கொள்ளப்பட்டது. இதனால் சோற்றுத்துறை சாதத் துறையாயிற்று; சாதத் துறை சாத்துறையென மருவிற்று. எனவே, இன்று திருச்சாத்துறை என்று அது வழங்கப்படுகின்றது.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .


முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment