பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 202                                          இதழ் - 0
நாள்  :  07 / 06 / 2026                      நாள்   :  0 / 0/ ௨௦௨ 




பழமொழி அறிவோம்

பழமொழி – 202

சுவாமி இல்லையென்றால் சாணியைப் பார்
மருந்தில்லை என்றால் பாணத்தைப்பார் '

உண்மை விளக்கம்

    முற்காலத்தில் மக்கள் இறைவனை வழிபட வேண்டுமெனில் சுவாமி சிலையோ அல்லது புகைப்படமோ இல்லையெனில் அதற்குப்பதிலாக மாட்டுச்சாணத்தைப் பிடித்துப் பிள்ளையாராக வைத்து வழிபடுவர். சுவாமி சிலை இல்லையென்பதால் வருத்தப்பட மாட்டார்கள் என்பதைக் குறிக்கவே “சுவாமி இல்லையென்றால் சாணியைப் பார்”  என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். 

     அதேபோல் முற்காலத்தில் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லையென்றால் மருத்துவமனையோ மருந்தோ முதலில் எடுத்துக்கொள்வதற்கு முன் கசாயம் வைத்துக் குடிப்பர். அந்த பாணம் உடலை குணமாக்கும் என்பதைக் குறிக்கவே “மருந்தில்லை என்றால் பாணத்தைப்பார்” என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment