இதழ் - 62 இதழ் - ௬௨
நாள் : 02-07-2023 நாள் : 0௨-0௭-௨௦௨௩

தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழில் வழங்கப்படும் பிற மொழிச் சொற்கள் |
தமிழ் சொற்கள் |
அஞ்சலி |
கும்பிடு |
அங்குரார்ப்பணம் |
கால்கோள் |
அயன் |
உண்மை நிலை |
ஆலிங்கனம் |
தழுவுகை |
குஷ்டம் |
தொழுநோய் |
- பெரியோரைப் பார்க்கும்போது இரு கைகளைக் கூப்பி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
- பெரியோரைப் பார்க்கும்போது இரு கைகளைக் கூப்பிக் கும்பிடுவது வழக்கம்.
- மூடப்பட்ட நூலகத்தை மீண்டும் திறக்க அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது
- மூடப்பட்ட நூலகத்தை மீண்டும் திறக்க கால்கோள் செய்யப்பட்டுள்ளது.
- அயனாக நீ வந்தமைக்கு நன்றி.
- உண்மை நிலை கூற நீ வந்தமைக்கு நன்றி.
- இளங்கோவும் சாத்தனாரும் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்தித்து ஆலிங்கனம் செய்து கொண்டனர்.
- இளங்கோவும் சாத்தனாரும் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்தித்துத் தழுவிக் கொண்டனர்.
- அன்னை தெரேசா குஷ்ட நோயாளிகளைத் தொட்டு மிகவும் பரிவுடன் நடந்து கொண்டார்.
- அன்னை தெரேசா தொழுநோய் நோயாளிகளைத் தொட்டு மிகவும் பரிவுடன் நடந்து கொண்டார்.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
கோவை
No comments:
Post a Comment