பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 153                                                                           இதழ் - ௧
நாள் : 13 - 04 - 2025                                                         நாள் :  -  - ௨௦௨ 


 


சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்


சிறுத்தொண்டர்

     திருத்தொண்டர் புராணத்தில் பாராட்டப்பெறுகின்ற சிவனடியாருள் ஒருவர் சிறுத்தொண்டர் என்னும் பெயருடையார். அவர் பல்லவ மன்னரிடம் படைத் தலைவராய்ப் பணி செய்தவர். பகைவரை முருக்கி வெல்லும் வீரம் வாய்ந்த அப்பெரியார் பரமனடியாரைக் கண்ட பொழுது பணிந்து தாழ்ந்து துவண்டு நின்ற காரணத்தால் சிறுத்தொண்டர் என்று சைவ உலகம் அவரைப் போற்றுவதாயிற்று. நெல்லை நாட்டிலுள்ள சிறுத்தொண்ட நல்லூர் என்னும் சிற்றூர் அவர் வாழ்ந்த ஊராதலால் அவர் பெருமையை நினைவூட்டுகின்றது என்பதை அறியலாம்.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment