இதழ் - 17 இதழ் - ௧௭
நாள் : 21-8-2022 நாள் : ௨௧-௮-௨௦௨௨
தமிழ்மொழியில் ஏறத்தாழ 1500 அரபுச்சொற்கள் கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பல சொற்களை அரபுச்சொற்கள் என்று அறியாமல் தமிழ்ச்சொற்கள் என எண்ணி நாம் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம்.
இதோ சில சொற்கள்…
- பணம் கட்டிய ரசீது எங்கே?
- பணம் கட்டிய ஒப்புப் படிவம் (பற்றுச்சீட்டு) எங்கே?
- நினைத்த மாதிரியே பணத்தை வசூல் பண்ணி விட்டாய்.
- நீ நினைத்த மாதிரியே பணத்தைத் திரட்டி விட்டாய்.
- எங்கள் ஜில்லாதான் தமிழகத்திலேயே சிறந்தது.
- எங்கள் மாவட்டம்தான் தமிழகத்திலேயே சிறந்தது.
- சனிக்கிழமைதோறும் பள்ளி நடைபெறும் என்ற ஆணையை அரசு ரத்து செய்தது.
- சனிக்கிழமைதோறும் பள்ளி நடைபெறும் என்ற ஆணையை அரசு விலக்கியது. (நீக்கியது)
- நான் என் பதவியை ராஜினாமா செய்தேன்.
- நான் என் பணியைத் துறந்தேன்.
( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment