இதழ் - 113 இதழ் - ௧௧௩
நாள் : 23 - 06 - 2024 நாள் : ௨௩ - 0௬ - ௨௦௨௪
சோழ நாட்டு மன்னர்
வளவன் மாதேவி
வளவன் மாதேவி என்பாள் பராந்தக சோழனுடைய துணைவியாராவார். அவள் பெயரால் நிலைபெற்ற சதுர்வேதி மங்கலம் வளவன் மாதேவி என வழங்குவதாயிற்று. தென்னார்க் காட்டு எரும்பூர் என்னும் உருமூர்க் கோயிற் சாசனத்தால் வளவன் மாதேவி என்ற ஊர் மேற்கா நாட்டைச் சேர்ந்த பிரம தேயம் என்பது விளங்கும். அவ்வூர் இப்பொழுது வளைய மாதேவி என்னும் பெயரோடு சிதம்பரம் வட்டத்தில் அமைந்துள்ளது.
உத்தமசீலி
உத்தமசீலி என்பான் பராந்தகனின் மைந்தர்களுள் ஒருவனாகக் கருதப்படுகின்றான். அவன் பெயரால் அமைந்த உத்தம சீலி சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர் இப்பொழுது உத்தம சேரி என வழங்கப்பட்டு வருகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment