இதழ் - 202 இதழ் - ௨0௨
I .பொதுவியற்பால: (12 துறைகள்) (சென்ற வாரத்தின் தொடர்ச்சி ...)
7. கற்காண்டல் : இறந்தவனுக்குக் கல் நிறுத்த நல்ல கல்லை
தேர்ந்தெடுப்பதைக் கூறுவது.
8.கற்கோள் நிலை : தேர்ந்தெடுத்த கல்லைக் கைக்கொள்வது.
9.கல் நீர்ப்படுத்தல்: தேர்ந்து எடுத்து வந்த கல்லை நீரில் போட்டு வைத்தல்
மற்றும் நடுதற்குரிய இடத்தில் சேர்த்தலும்.
10.கல் நடுதல்: மறவரின் நினைவாகக் கல்லை நடுதல்.
11.கல்முறை பழிச்சல்: நட்ட கல்லினை வாழ்த்துவது.
12.இற்கொண்டு புகுதல்: கோயிலை எழுப்பி அதனுள் நடுகல்லை எடுத்துச் செல்வது.
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020

No comments:
Post a Comment