பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 61                                                                                       இதழ் -
நாள் : 25-06-2023                                                                      நாள் : -0-௨௦௨௩
 
 

 
 
நெடுமையும் குறுமையும்

சில ஊர்களின் நெடுமையும் குறுமையும் அவற்றில் பெயர்களால் அறியப்படும். இத்தகைய பெயர்களைத் தாங்கியுள்ள ஊர்கள் அவற்றின் அளவைக் கொண்டோ அல்லது அவற்றின் பழமையைக் கொண்டோ (பெரிய, நீண்ட – நெடிய, சிறிய - குறுகிய) இவ்வாறு காரணப்பெயர் பெற்றிருந்தன. நெடுங்களம் என்பது தேவாரத்தில் பாடப் பெற்றுள்ள ஒரு பெரிய நகரம். திருநாவுக்கரசர் அவ்வூரை 'நெடுங்கள மாநகர்' என்று பாடியுள்ளார். அவ்வூரின் பெயர் இப்பொழுது திருநெடுங்ளம் என வழங்குகின்றது. மாயூரத்துக்கு அருகேயுள்ள நீடூர் என்னும் ஊர் பழங்காலத்தில் பெரியதோர் ஊராக இருந்திருத்தல் வேண்டும் எனத் தோன்றுகிறது. நீலகிரியில் அமைந்துள்ள ஊர்களான நெடுகுளா, நெடிகாடு முதலியன ஊரின் பழமையைக் கொண்டு அழைக்கப்படுகின்றன. நெல்லை நாட்டிலுள்ள திருப்பதிகளில் ஒன்று குறுங்குடி என்பதாகும். அஃது ஆழ்வாரது மங்களாசாசனம் பெற்றமையால் திருக்குறுங்குடி ஆயிற்று. திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த குறும்புலியூரிலும், தொண்டை நாட்டுக் குறுங்கோழியூரிலும் குறுமை என்னும் சொல் அமைந்திருக்கக் காண்கிறோம்.

 
 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment