பக்கங்கள்

தமிழ்சொல் தெளிவோம்

இதழ் - 83                                                                                                       இதழ் - 
நாள் : 26-11-2023                                                                                         நாள் : --௨௦௨௩

    
 

தமிழ்ச்சொல் தெளிவோம்

 

தமிழ்நாட்டுத் தமிழில் கலந்துள்ள  பாலி மொழிச் சொற்கள்


தமிழ்ச்சொற்கள்


வித்துவான்
புலவர்

வியாக்கியானம்
விரிவுரை

வியாதி, நோய்
பிணி

விருட்சம்
மரம்


வந்தனம்

வணக்கம்
 
 
  
  • வித்துவான் தியாகராச செட்டியார் பற்றி அறிந்து கொள்வோம்.
  • புலவர் தியாகராச செட்டியார் பற்றி அறிந்து கொள்வோம்.

  • க. வெள்ளைவாரணன் அவர்களின் திருஞானசம்பந்தர் பற்றிய வியாக்கியானம் மிகச் சிறப்பாக இருக்கும்.
  • க. வெள்ளைவாரணன் அவர்களின் திருஞானசம்பந்தர் பற்றிய விரிவுரை மிகச் சிறப்பாக இருக்கும்.
 
  • வியாதி வந்தவர்களை பரிவுடன் கவனித்தவர் அன்னை தெரேசா ஆவார்.
  • பிணி வந்தவர்களை பரிவுடன் கவனித்தவர் அன்னை தெரேசா ஆவார்.

  • ஆல விருட்சத்தில் பல பறவைகள் கூடு கட்டி வாழ்ந்தன.
  • ஆல மரத்தில் பல பறவைகள் கூடு கட்டி வாழ்ந்தன.

  • பெரியவர்களை வணங்கி வந்தனம் சொல்வோம்.
  • பெரியவர்களை வணங்கி வணக்கம் சொல்வோம்.
 
 மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
 
 
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment