பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 127                                                                               இதழ் - ௧
நாள் : 29- 09 - 2024                                                             நாள் :  -  - ௨௦௨௪



இராஜராஜன் பெயரில் எழுந்த ஊர்கள்



        இராஜராஜனுக்குப் பின்பு அரசுரிமை பெற்றவன் அவன் மைந்தனாகிய இராஜேந்திரன் ஆவான். தஞ்சைச் சோழர் என்று சொல்லப்படும் இடைக்காலத்துப் பெருஞ் சோழ மன்னர் பெருமையெல்லாம் தன் பெருமையாக்கிக் கொண்டு தலைசிறந்து விளங்கியவன் இவனே. இவன் காலத்தில் சோழர் பேரரசு உச்சநிலை அடைந்திருந்தது. இவன் புகழ், பாரத நாட்டின் எல்லை கடந்து, சிங்களம், கடாரம், நிக்கோபார் தீவு (மாநக்கவாரம்) முதலிய பன்னாடுகளிலும் பரவி நின்றது.

     இம்மன்னன் தான் பெற்ற வெற்றியின் அறிகுறியாகச் விருதுப்பெயர்கள் சில பட்டப்பெயர்களை மேற்கொண்டான். அவற்றுள் மிகச் சிறந்தவையான முடி கொண்டான், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்னும் விருதுப் பெயர் மூன்றும் ஊர்ப் பெயர்களிலே விளங்குகின்றன.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment