பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 185                                                                     இதழ் - ௧
நாள் :  21 - 12 - 2025                                                   நாள் :    - ௨௦௨ 


இலக்கணம் கற்போம்
 

கரந்தைப் படலம்

கரந்தைத்திணை

கரந்தைப் பூவினைச் சூடி மாற்றார் கவர்ந்து சென்ற ஆக்களை மீட்கச் செல்வது கரந்தைத்திணை எனப்படும்.

கரந்தைத்திணை துறைகள் மொத்தம்  – 13

1.  கரந்தை அரவம்
   வெட்சி வீரர்களால் கவரப்பட்ட ஆநிரைகளை மீட்பதற்காக கரந்தை மறவர்கள் 
   ஓரிடத்தில் கூடுதல். அதனால் ஏற்பட்ட போர் ஓசையே ஆகும்.

2.  அதரிடைச் செலவு
   வெட்சி மறவர்களைப் பின்பற்றி கரந்தை மறவர்களும் பின்னால் செல்லுதல்.

3.  போர்மலைதல்
    வெட்சி மறவர்களோடு கரந்தை மறவர்கள் போர் புரிவது. 

4.  புண்ணோடு வருதல்
   கரந்தை மறவர்கள் விழுப்புண்ணைத் தாங்கி வருவது. 

5.  போர்க்களத்து ஒழிதல்
    வெட்சியாருடன் போரிட்டுக் கரந்தை மறவர்கள் போர் களத்தில் இறப்பது.

6.  ஆளெரி பிள்ளை
    தான் ஒருவனாக நின்று வெட்சி மறவர்களை வெட்டி விழ்த்திய கரந்தை வீரன் 
    ஒருவனின் நிலையைக் கூறுவது.

7.  பிள்ளைத் தெளிவு
    விழுப்புண்பட்ட கரந்தை மறவன் தான் பெற்ற புண்ணைக் கண்டு 
    மகிழ்ந்துக் கூத்தாடுவது.

8.  பிள்ளைப்பாட்டு
    பகைமறவனின் குடலை வேலுக்கு மாலையாக அணிந்து அவ்வேலைச் சுற்றி 
    மறவன் ஆடுவது.

9.  கையறுநிலை
    தன் தலைவனின் இறப்பால் செய்வதறியாது பாணன் திகைத்து நிற்றல்.

10.  நெடுமொழி கூறல்
    ஒருவீரன் தன் ஆற்றலைத் (பெருமையை) தானே எடுத்துக் கூறுவது.

11.  பிள்ளைப் பெயர்ச்சி
    தீய நிமித்தங்களைப் பொருட்படுத்தாது நிரை மீட்கச் சென்றவனுடைய ஆற்றலை 
    அரசன் சிறப்பிப்பது.

12.  வேத்தியன் மலிபு
    மறவர்கள் தம் அரசனைப் போற்றிக் கொண்டாடுவது ஆகும்.

13.  குடிநிலை
    கரந்தை மறவர்கள் தம்முடைய குடிப்பெருமையைக் கூறுவது.

இலக்கணம் தொடரும் . . .


திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment