பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 140                                                                           இதழ் - ௧
நாள் : 29 - 12 - 2024                                                         நாள் :  - ௧௨ - ௨௦௨௪



குழுஉக்குறி

விளக்கம்
  • ஒரு குறிப்பிட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் ஒரு பொருளை அல்லது செயலைக் குறிக்கும் சொல்லை ஒழித்து வேறொரு சொல்லால் அப்பொருளை அல்லது அச்செயலை குறிப்பிடுவது குழுஉக்குறி எனப்படும். (சிற்சில குழுக்களுள் வழங்கும் சங்கேத மொழி)
  • தற்பொழுது இளைஞர்களுக்கிடையே காணப்படும் அவர்களின் நடவடிக்கைச் சார்ந்த சொற்களும் ஆசிரியர்கள், பெரியோர்கள் பற்றி மாணவர்கள் தமக்குள் உரையாடும்போது பிறரறியா வண்ணம் தமக்குள் பயன்படுத்தும் சொற்களும் இவ்வகையைச் சார்ந்தவை.

சான்று
  • பொற்கொல்லர் பொன்னை ‘பறி’ என்று பயன்படுத்துவர்.
  • யானைப்பாகர் ஆடையை ‘காரை’ என்று பயன்படுத்துவர்.


திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment