பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 147                                                                                இதழ் - ௧
நாள் : 02 - 03 - 2025                                                            நாள் :  -  - ௨௦௨



பழமொழி அறிவோம்

பழமொழி – 147

“ ஊர்ந்துருளின் குன்று வழியடுப்ப தில் 

விளக்கம்
ஒரு குன்றானது ஊர்ந்து வந்து கொண்டிருப்பின் அதைத் தடுக்க யாராலும் இயலாது என்பது இப்பழமொழியின் பொருளாகும்.


“ ஊர்ந்துருளின் குன்று வழியடுப்ப தில் 

உண்மை விளக்கம்

இன்றி யமையா இருமுது மக்களைப்
பொன்றினமை கண்டும் பொருள்பொருளாக் கொள்பவோ
ஒன்றும் வகையான் அறம்செய்க 'ஊர்ந்துருளின்
குன்று வழியடுப்ப தில்'

மனித வாழ்கையானது நிலையற்றது என்பதை அனைவரும் அறிய வேண்டும். தம்மை ஈன்று வளர்த்த தாய் தந்தையர் இறப்பிற்குப் பின்னும் தமக்கும் அதே நிலை என்பதை உணர வேண்டும். அத்தகைய காலத்தில் தம்மால் இயன்ற அளவு தர்மங்களைச் செய்யவேண்டும். 

அதாவது குன்று ஒன்று மெதுவாய் ஊர்ந்து வந்தால் அதன் வழியை யாராலும் தடுக்க இயலாது. அதைப் போலவே நமக்கு ஏற்பட இருக்கும் இறப்பையும் யாராலும் தடுக்க இயவாது என்பதைக் குறிக்கவே 'ஊர்ந்துருளின் குன்று வழியடுப்ப தில்' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது. (காலம் கிடைக்கும் போதெல்லாம் தம்மால் இயன்ற தர்மங்களைச் செய்ய வேண்டும்).

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment