இதழ் - 37 இதழ் - ௩௭
நாள் : 08-01-2023 நாள் : 0அ - 0௧ - ௨௦௨௩
குப்பம்
நெய்தல் நிலத்தில் வாழும் மக்கள் சமூக அடிப்படையில் வலையர் என்றும், செம்படவர் என்றும், பரதவர் என்றும் வழங்கப் பெறுவர். அவர்கள் வசிக்கும் இடம் குப்பம் என்னும் பெயரால் குறிக்கப்படும். சென்னையைச் சேர்ந்த கடற்கரையில் பல குப்பங்கள் உண்டு. காட்டுக்குப்பம், கருங்குடிக்குப்பம், நொச்சிக்குப்பம், சோலைக்குப்பம், குப்பம் முதலிய ஊர்கள் பரதவர் வாழும் இடங்களே ஆகும்.
பாக்கம்
நெய்தல் நிலம் கடலும் கடல் சார்ந்த பகுதி என்பதால் அவ்விடத்தைச் சார்ந்த கடற்கரைச் சிற்றூர்கள் பாக்கம் என்று பெயர் பெறும். சென்னை மாநகரின் அருகே சில பாக்கங்கள் உண்டு. கோடம்பாக்கம், மீனம்பாக்கம், வில்லிபாக்கம் முதலிய ஊர்கள் நெய்தல் நிலத்தில் எழுந்த பாக்கம் குடியிருப்பேயாகும்.
சில காலத்திற்கு முன் தனித் தனிப் பாக்கங்களாய்ச் சென்னையின் அண்மையிலிருந்த சிற்றூர்கள் இப்போது அந்நகரின் அங்கங்களாய்விட்டன. புதுப்பாக்கம், புரசைபாக்கம், சேப்பாக்கம், நுங்கம்பாக்கம் முதலிய ஊர்கள் சென்னை மாநகரோடு சேர்ந்திருக்கின்றன. சங்க காலத்தில் பட்டினப்பாக்கம் வணிக நகரமாக இருந்ததை நமது இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment