இதழ் - 155 இதழ் - ௧௫௫
நாள் : 27 - 04 - 2025 நாள் : ௨௭ - ௦௪ - ௨௦௨௫
ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக் கிடக்கும் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோளாகும்.
“ யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை
ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே “
(நன்னூல். நூற்பா எ. 417)
சான்று
“ஆலத்து மேல குவளை குளத்துள
வாலின் நெடிய குரங்கு”
மேற்கண்ட பாடலில் ஆலத்து மேல் குவளை என்றும் குளத்தில் வாலின் நெடிய குரங்கு என்றும் பொருள் கொண்டால் பொருத்தமற்றதாகிவிடும். இதில் ஆலத்து மேல குரங்கு குளத்துள குவளை என்று கருத்தைக் கொண்டு அங்குமிங்கும் கொண்டு பொருள்கோள் அமைந்திருப்பதால் இது கொண்டு கூட்டுப் பொருள்கோள் எனப்படும்.
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment