பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 203                                                                     இதழ் - உ௰௩
நாள்  :  18 / 10 / 2026                                                    நாள்   :  க௮ / ௰ / ௨௰உ௬

 


இலக்கணம் கற்போம்
 

பெருந்திணை

    பெருந்திணை விளக்கம், பெருந்திணையின் வகைகள், அக இலக்கியங்களிலும், புறநானூற்றிலும் பெருந்திணை அமைந்துள்ள தன்மை ஆகியவற்றை இப்பகுதியில் அறியலாம். பெருந்திணை பாடிய புலவர் பெயர்களையும் அறியலாம்.

விளக்கம்

    பெருந்திணையைப் பொருந்தாக் காமம் அல்லது ஒவ்வாக் கொள்ளும் காதலே பெருந்திணை ஆகும். இப்பொருத்தமின்மை பற்றிப் பெருந்திணையின் இலக்கணத்தில் விளக்கமாகக் காணலாம்.

பாடிய புலவர்கள்

     கலித்தொகையில் மருதம், முல்லை, நெய்தல் திணைகளில் அமைந்த பதினான்கு பாடல்கள் பெருந்திணைக்கும் உரியனவாக உள்ளன. புறநானூற்றில் ஐந்து பாடல்கள் (பாடல் எண்கள் 143, 144, 145, 146, 147) பெருந்திணையைச் சார்ந்துள்ளன.

    மருதக்கலியில் இரண்டு பாடல்களும் (பாடல் எண்கள் 62, 94 ஆசிரியர் மருதனிளநாகனார்) முல்லைக்கலியில் இரண்டு பாடல்களும் (பாடல் எண்கள் 112, 113, ஆசிரியர் சோழன் நல்லுருத்திரன்) நெய்தல்கலியில் பத்துப்பாடல்களும் (பாடல் எண்கள் 138 முதல் 147வரை, ஆசிரியர் நல்லந்துவனார்) பெருந்திணையில் அமைந்தவை ஆகும்.

    புறநானூற்றில் 143ஆவது பாடலைக் கபிலரும், 144, 145ஆவது பாடல்களைப் பரணரும், 146ஆவது பாடலை அரிசில்கிழாரும், 147ஆவது பாடலைப் பெருங்குன்றூர்கிழாரும் பாடியுள்ளனர்.

இலக்கணம் தொடரும் . . .



திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment