பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 32                                                               இதழ் -
நாள் : 04-12-2022                                                  நாள் : 0 - - ௨௦௨௨
 
   
 
மருதம் நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்
 
புன்செய்
     மருத நிலத்தில் வளமிகுந்த நிலத்தை நன்செய் (நஞ்சை) என்றும் வளம் குறைந்த நிலத்தை புன்செய் (புஞ்சை) என்றும் வழங்குவர். 
 
     தஞ்சை நாட்டில் பாடல்பெற்ற நனிபள்ளி என்னும் பகுதி இன்று புன்செய் என்று வழங்கப்படுகிறது. அதேபோல கொங்குநாட்டிலுள்ள ஊர்களுள் ஒன்றான புன்செய் புளியம்பட்டி இன்றளவிலும் புஞ்சை புளியம்பட்டி என்று மருவி  வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மருதநிலம் வளத்தின் தன்மைக்கேற்ப ஊர்பெயர்களை அமைத்து வழங்கிவருவதைக் காணமுடிகிறது.
 
பொய்கை
    மருதநிலத்தில் இயற்கையில் அமைந்த நீர்நிலை பொய்கை எனப்படும். பொய்கையார் என்பது பழந்தமிழ் புலவர்களில் ஒருவர் அவர் பொய்கை என்னும் ஊரில் பிறந்தார் என்பர். 
 
     மேலும் முதலாழ்வார்கள் மூவரில் பொய்கையாழ்வார் ஒருவர். காஞ்சிபுரத்திலுள்ள திருவெஃகா என்னும் திருமால் கோயிலை அடுத்துள்ள தாமரைப் பொய்கையில் பிறந்தவராதலால் பொய்கையார் என்னும் பெயர் பெற்றார் என்று குரு பரம்பரை குறிப்பிடுகிறது.
 
     இன்றும் வடஆர்காட்டில் பொய்கை என்னும் ஊர் அமைந்துள்ளது. இதன் மூலம் குளத்தைக் குறிக்கும் பொய்கை என்னும் சொல் மருதநில ஊர்ப்பெயராக இருப்பதை அறியமுடிகிறது.



இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment