பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 57                                                                                        இதழ் -
நாள் : 28-05-2023                                                                        நாள் : -0-௨௦௨௩ 
 
  
 
பழமொழி – 57
 
” இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை “
 
விளக்கம்
     ஒரு கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் பசுவானது தனக்கு எதிர்திசையில் உள்ள கரையில் புல் பசுமையாக இருக்கிறது என்று அக்கரை சென்று மேயும். அங்கேயும் அதே பசுமை தான் மிஞ்சும் என்பது  இப்பழமொழியின் பொருளாகும்.

 
” இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை “
 
உண்மை விளக்கம்
     இங்கு இக்கரை என்றால் ஆற்றின் ஒருபக்க கரை என்றும் அக்கரை என்றால் ஆற்றின் எதிர் திசையில் உள்ள கரை என்றும் பொருள்.

    இப்பழமொழி பொதுவாகப் பசுவிற்குச் சான்றாகச் சொன்னாலும் குறிப்பாக, மனிதனின் நிலையில்லாத் தன்மையைச் சுட்டிக்காட்டவே வழக்கத்தில் உள்ளது.
 
    ஒரு மனிதன் தன்னிடமுள்ள நிறை, குறைகளை ஏற்றுக்கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து மற்றவர்களைக்கண்டு பொறாமைப்பட்டுக் கொண்டும் மற்றவர்களின் பொருளாதாரத்தை தன்னோடு ஒப்பிட்டுக்கொண்டும் இருக்கக்கூடாது என்பதை உணர்த்தவே ”இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

    இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment