பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 164                                                                                          இதழ் - ௧
நாள் : 06 - 07 - 2025                                                                       நாள் :  -  - ௨௦௨ 




பெயரடை, வினையடை

பெயரடை

   பெயரடை என்பது ஒரு பெயர்ச்சொல்லை விவரிக்கும் அல்லது மாற்றி அமைக்கும் சொல். வினையடை என்பது ஒரு வினைச்சொல்லை விவரிக்கும் சொல்.

உதாரணம்
  • அழகான குழந்தை 
    • "அழகான" என்பது "குழந்தை" என்ற பெயர்ச்சொல்லின் தன்மையை விவரிக்கிறது. 
  • இரண்டு புத்தகங்கள் 
    •  "இரண்டு" என்பது "புத்தகங்கள்" என்ற பெயர்ச்சொல்லின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. 


வினையடை
     ஒரு வினைச்சொல்லின் தன்மையை விவரிக்கும் சொல் வினையடை. 

உதாரணம்
  • விரைவாக ஓடினான்
    • "விரைவாக" என்பது "ஓடினான்" என்ற வினைச்சொல்லின் தன்மையை விவரிக்கிறது. அதாவது எப்படி ஓடினான் என்பதை விளக்குகிறது.
  • மகிழ்ச்சியுடன் ஆடினான்
    • "மகிழ்ச்சியுடன்" என்பது "ஆடினான்" என்ற  வினைச்சொல்லின் தன்மையை விவரிக்கிறது.

குறிப்பு ::: சுருக்கமாக எடுத்துரைக்க வேண்டுமென்றால், ஒரு பெயர்ச்சொல்லின் தன்மையை விவரிக்கும் சொல் பெயரடை, ஒரு வினைச்சொல்லின் தன்மையை விவரிக்கும் சொல் வினையடை.


இலக்கணம் தொடரும் . . . 


திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment