பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 109                                                                                           இதழ் - ௧0
நாள் : 26-05-2024                                                                           நாள் : -0ரு-௨௦௨௪


பழமொழி – 109

ஏறச் சொன்னால் எருது கோபம்
இறங்கச் சொன்னால் நொண்டிக் கோபம் ”

விளக்கம்
    சிறுவன் ஒருவன் எருதின் மேல் ஏறி வருகிறான். அவன் ஏறும் போது எருது கோபம் கொள்ளும் அவனை இறங்கச் சொன்னால் நொண்டிக் (செல்லமாக) கோபம் கொள்வான் என்று இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக்கொள்கிறோம்.


ஏறச் சொன்னால் எருது கோபம்
இறங்கச் சொன்னால் நொண்டிக் கோபம் ”

உண்மை விளக்கம்
    இங்கு நொண்டி என்றால் ஊனமுற்றவர் என்று பொருள். ஊனமுற்ற ஒருவர் தன் எருதினை மேய்சலுக்கு ஓட்டிச் செல்கிறார். அவ்வாறு ஓட்டிச்செல்லும் போது தான் எருதின் மேல் ஏறிச்செல்ல நினைத்தால் எருதுக்குக் கோபம் வரும். நடக்கச் சொன்னால் ஊனமுற்ற இவனுக்குக் கோபம் வரும் என்பதையே “ஏறச் சொன்னால் எருது கோபம் இறங்கச் சொன்னால் நொண்டிக் கோபம்“ என்றனர். இப்பழமொழியின் மூலம் நாம் செய்யும் சில செயல்கள் சிலருக்கு நன்மையாகவும் சிலருக்குத் தீமையாகவும் முடியும் என்பதை உணர்த்தவே இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். 

    மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment