இதழ் - 77 இதழ் - ௭௭
நாள் : 15-10-2023 நாள் : ௧௫-௧0-௨௦௨௩
சந்தி
சந்தி
- பகுதி, விகுதி, இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள் புணரும்போது இடையில் தோன்றும் உறுப்பு சந்தி எனப்படும்.
- சந்தி என்பதற்கு புணர்ச்சி என்று பெயர்.
- சந்தி பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.
- புணர்ச்சியின்போது ஏற்படும் விகாரங்களான தோன்றல், திரிதல், கெடுதலை சந்தி என்றும் சொல்வர்.
- ஓர் எழுத்துத் தோன்றுதலைச் சந்தி என்பர்.
- பெரும்பாலும் த், ப், க் என்னும் மூன்று எழுத்துகளுள் ஒன்று சந்தியாக வரும்.
- மற்றைய திரிதலையும் கெடுதலையும் விகாரம் என்றும் வழங்குவர்.
- உடம்படுமெய்கள் (ய், வ்) சந்தியாக வருவதுண்டு.
- அசைத்தான் = அசை + த் + த் + ஆன்
- படிக்கிறார் = படி + க் + கிறு + ஆர்
- காப்பார் = கா + ப் + ப் + ஆர்
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment