இதழ் - 104 இதழ் - ௧0௪
நாள் : 21-04-2024 நாள் : ௨௪-0௪-௨௦௨௪
- இனமிகல் என்னும் விதியாவது வருமொழியின் முதல் எழுத்து, தனது இன எழுத்துடன் மிகுந்து புணர்வது .
- இனவெழுத்து என்பது வல்லினத்திற்கு மெல்லினமும், இடையினம் ஒன்றிற்கொன்றும் இனவெழுத்து என்பதை முன்னர் வகுப்பிலேயே பார்த்திருந்தோம்.
சான்று
கருங்குயில் = கருமை + குயில்
- ஈறுபோதல் விதிப்படி மை கெட்டது
- கரு + குயில்
- இனமிகல் விதிப்படி (கு = ங் )
- கருங் + குயில்
- கருங்குயில் எனப் புணர்ந்தது.
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment