பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 31                                                                இதழ் -
நாள் : 27-11-2022                                                   நாள் : ௨௭ - ௧௧ - ௨௦௨௨

 

 
பழமொழி – 31

 “ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்“

     ஆயிரம் பேரைக் கொன்றால் தான் அரை வைத்தியன் (மருத்துவர்) ஆக முடியும் என்று நாம் தவறாக இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.

உண்மை விளக்கம்

“ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்“

     முற்காலத்தில் இயற்கை மருத்துவம் என்பது யாவரும் அறிந்ததே. அக்காலத்தில் ஆயிரம் வகையான வேர்களையும் அதன் பயன்களையும் அறிந்த ஒருவன் மட்டுமே அரை வைத்தியன் (மருத்துவர்) ஆவான் என்பதை “ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்“ என்று இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.

     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment