இதழ் - 162 இதழ் - ௧௬௨
நாள் : 22 - 06 - 2025 நாள் : ௨௨ - ௦௬ - ௨௦௨௫
அடைமொழி என்பது பலவகைகள் உள்ள ஒரு பொருளை, எவ்வித ஐயமும் இன்றி அப்பொருளை மட்டும் குறிக்கப் பயன்படுத்தும் ஒரு தனிச்சொல் ஆகும்.
இது இரண்டு வகைப்படும்.
அவை,
- இனமுள்ள அடைமொழி
- இனமில்லா அடைமொழி
இனமுள்ள அடைமொழி
பல இனங்கள் உள்ள பொருளுக்கு அதன் இனம் பிரித்து அறிய உதவும் தனிச்சொல்லே இனமுள்ள அடைமொழி ஆகும்.
உதாரணம்
” தமிழ்ப்பாடநூல் ”
இங்கு, ”பாடநூல்” என்பது தமிழ்ப் பாடநூல், ஆங்கிலப் பாடநூல், கணிதப் பாடநூல், அறிவியல் பாடநூல், சமூக அறிவியல் பாடநூல், கணிப்பொறியியல் பாடநூல் எனப் பல வகைகள் உள்ள ஒரு பொருளைக் குறிக்கும் சொல். இவற்றுள் தமிழ்ப் பாடத்துக்குரிய நூலை வகைப்பிரித்துக் காட்ட உதவும் வகையில் “தமிழ்” என்ற அடைமொழி இணைத்து “தமிழ்ப் பாடநூல்” என அமைகிறது. ”பாடநூல்” என்பதற்கு “தமிழ்” அடைமொழியாக வந்துள்ளது. எனவே இது இன அடைமொழியாகும்.
தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment