இதழ் - 74 இதழ் - ௭௪
நாள் : 24-09-2023 நாள் : ௨௪-0௯-௨௦௨௩
தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழில் வழங்கப்படும் பிற மொழிச்சொற்கள் | தமிழ்ச்சொற்கள் |
எடிட்டர் |
பதிப்பாசிரியர் |
நர்ஸ் | செவிலி |
மஃப்டி | (அலுவல் சாராத) பொது உடை |
ஸ்னாப்ஸ்சிஸ் | சுருக்கம் / பொழிப்பு |
உயிர்ப்பிராணி | உயிரி |
- இந்நூலின் எடிட்டர் யார்?
- இந்நூலின் பதிப்பாசிரியர் யார்?
- குழந்தையை முதலில் கையில் ஏந்துபவர் நர்ஸ் என்றால் அது மிகையல்ல.
- குழந்தையை முதலில் கையில் ஏந்துபவர் செவிலி என்றால் அது மிகையல்ல.
- காவல்துறையினர் மஃப்டியில் வந்துள்ளனர்.
- காவல்துறையினர் (அலுவல் சாராத) பொது உடையில் வந்துள்ளனர்.
- எனது ஸ்னாப்சிஸ்-ல் எந்தக் குறையும் இல்லை என நெறியாளர் தெரிவித்தார்.
- எனது ஆய்வுச் சுருக்கத்தில் எந்தக் குறையும் இல்லை என நெறியாளர் தெரிவித்தார்.
- மொழியை உயிர்ப்பிராணி எனலாம்.
- மொழியை உயிரி எனலாம்.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment