பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 109                                                                                           இதழ் - ௧0
நாள் : 26-05-2024                                                                           நாள் : -0ரு-௨௦௨௪


மகரமெய் இடையின முதன்மொழியோடு 
இயல்பாகப் புணர்தல்
சான்று

    மரம் + வேர் = மரவேர் 
  • மகர ஈற்று மொழி இடையின (வ்) மெய் முதல் எழுத்தோடு புணரும்போது, நிலைமொழியின் ஈற்று மெய் கெடுதல் விதிபடி மகரம் கெட்டு இயல்பாகப் புணர்ந்தது.


மெல்லின முதன் மொழியோடு இயல்பாகப் புணர்தல் 

சான்று

    மரம் + நார் = மரநார்
  • மகர ஈற்று நிலைமொழி மெல்லின (ந) முதன்மொழியோடு புணரும்போது முதலில் மகரம் கெட்டு இயல்பாகப் புணர்ந்தது.


       தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment