வெட்சித்திணை துறைகள் – 19
1. வெட்சி அரவம்
பகைவரின் ஆநிரைகளைக் கவரச்செல்லும்போது பல்வகை இசைக் கருவிகளை
முழங்கி ஆராவாரித்துச் செல்லல்.
2. விரிச்சி
தாம் மேற்கொள்ளும் செயலின் நிலையை ஆராய்தல். நற்சொல் கேட்டல்.
3. செலவு (பயணம்)
வெட்சி மறவர்கள் ஆநிரைகளைக் கவர பகைவர் நாட்டிற்குச் செல்லுதல்.
4. வேய் (ஒற்று)
ஆநிரைப் பற்றியச் செய்திகளை ஒற்றர் ஆராய்ந்து வந்து கூறுதல்.
5. புறத்திறை
பகைவரின் மதிலைச் சுற்றி வளைத்துப் புறத்தே (வெளியே) தங்குதல்.
6. ஊர்கொலை
பகைவரின் மதிலைத் தீயிட்டு அழித்து, ஊரில் உள்ளோரைக் கொள்வது.
7. ஆகொள்
பகைவருடைய ஆக்களைக் கன்றுடன் கவர்வது.
8. பூசல்மாற்று
எதிர்த்துப் போர் செய்து, இனிப் போர் இல்லை என்று சொல்லுவது.
9. சுரத்துய்த்தல்
தம்மால் கவரப்பட்ட ஆநிரைகளுக்குத் துன்பம் நேராமல் காட்டு வழியே ஓட்டிச் செல்லுதல்.
10. தலைத்தோற்றம்
ஆநிரைகளைக் கவர்ந்து வந்த வெட்சித்தலைவன் முன்னே வந்து ஊரார்க்கு
மகிழ்ச்சித் தோன்றும்படிச் சொல்வது.
11. தந்துநிறை
வெட்சியார் தாம் கைப்பற்றி வந்த ஆநிரைகளை ஊரின்கண் வந்து நிறுத்தியது.
12. பாதீடு
மறவர்களின் தகுதிக்கேற்ப ஆநிரைகளைப் பங்கிட்டுக் கொடுப்பது.
13. உண்டாட்டு
மறவர்கள் கள்ளினை உண்டு தன் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவது.
14. கொடை
மறவர்கள் தான் பிரித்துக் கொண்ட ஆக்களைப் பிறருக்குக் கொடையாகக் கொடுப்பது.
15. புலனறி சிறப்பு
சரியாக ஒற்று அறிந்தவர்களுக்குச் சிறப்புச் செய்வது.
16. பிள்ளை வழக்கு
நிமித்தமாகிய சகுனம் சொன்னவர்களுக்கு ஆக்களைப் பரிசாகக் கொடுத்து சிறப்பிப்பது.
17. துடிநிலை
தொன்றுதொட்டு மரபு மாறாமல் துடிகொட்டுபவனுடைய குடிப்பெருமையைப் புகழ்ந்துக் கூறுவது.
18. கொற்றவை நிலை
வெற்றிக்குக் காரணமாக விளங்கும் கொற்றவைத் தெய்வத்தை வணங்குதல்.
19. வெறியாட்டு
மறக்குடி மகளிர் வேலனோடு வள்ளிக்கூத்தை ஆடுவது.
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020

No comments:
Post a Comment