பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 143                                                                                     இதழ் - ௧௪௩
நாள் : 02 - 02 - 2025                                                                 நாள் : ௦௨ - ௦௨ - ௨௦௨௫



பழமொழி அறிவோம்

பழமொழி – 143

“ அவசரமானால் அரிக்கன் சட்டியிலும் கை நுழையாது ”

விளக்கம்

ஒருவன் ஒரு பணியை அவசரமாகச் செய்யும் போது அரிக்கன் சட்டி போன்ற பெரிய சட்டியிலும் கூட கை நுழையாது என்பது இப்பழமொழிக்கு விளக்கம்.


             “ அவசரமானால் அரிக்கன் சட்டியிலும் கை நுழையாது ”

உண்மை விளக்கம்

இங்கு “அரிக்கன் சட்டி” என்பது வாய் பகுதி அகன்ற சட்டியைக் குறிக்கும். 

நாம் அனைவரும் ஒரு பணியை அவசரமாகச் செய்யும் போது அதில் நிதானம் ஏற்படுவதில்லை. ஆகையால் வாய் அகன்ற பாத்திரத்தில் கூட கையை நுழைக்க முடிவதில்லை. அதே பணியை நிதானமாகச் செய்தால்தான் அச்செயல் முழுமையடையும் என்பதைக் குறிக்கவே “அவசரமானால் அரிக்கன் சட்டியிலும் கை நுழையாது” இந்தப் பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment