பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 99                                                                                               இதழ் - 
நாள் : 17-03-2024                                                                                நாள் : -0-௨௦௨


பழமொழி – 99

கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினது போல
 
விளக்கம்

    கொல்லைக் காட்டில் (சவுக்குத் தோப்பு) உள்ள நரி எதிரில் வருவோர்களைக் கண்டு பல்லைக் காண்பித்து பயமுறுத்தும் என்பது இப்பழமொழிக்கு விளக்கமாகும்.


      கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினது போல

உண்மை விளக்கம்

     இங்கு கொல்லைக் காட்டில் (சவுக்குத் தோப்பு) சுற்றித் திரியும் நரிகள் அடர்ந்த காட்டில் உள்ள நரிகளைப் போன்று ஆபத்தானது இல்லை. இருப்பினும் தன் முன் வருவோர்களைக் கூரிய பற்களைக் காண்பித்துப் பயமுறுத்தும் தன்மை கொண்டது.

    இந்நரிகளைப் போன்றே சில மனிதர்கள் பலசாலிகளாக இல்லாவிட்டாலும் தன் உடல் மொழியால் மற்றவர்களைப் பயமுறுத்துவார்கள். ஆனால் இவர்களால் பெரிய பாதிப்பு இருக்காது. இதை உணர்த்தவே “கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினது போல“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

    மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment