இதழ் - 185 இதழ் - ௧௮௫
நாள் : 21 - 12 - 2025 நாள் : ௨௧ - ௧௨ - ௨௦௨௫
சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்
திருக்கழுக்குன்றம்
ஈசன் கோயில் கொண்ட ஏனைய மலைப்பதிகளும் திருஞான சம்பந்தர் தேவாரத்தால்
விளங்குவனவாகும்.
"கண்ணார் கழுக்குன்றம் கயிலை கோணம்
பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண்ணார் மொழி மங்கையோர் பங்குடையான்
பரங்குன்றம் பருப்பதம்"
என்றெழுந்த திருவாக்கிலுள்ள கழுக்குன்றம் திருக்கழுக்குன்றம் என்னும் சிறந்த
பதியாகும். பண்டை நாளில் தொண்டை நாட்டைச் சேர்ந்தது திருக்கழுக்குன்றம்.
தேவாரம், திருவாசகம் ஆகிய இரு பாமாலையும் பெற்ற அக்குன்றம் வேதாசலம்
என்றும், வேதகிரி என்றும் வடமொழியில் வழங்கும். நினைப்பிற்கு எட்டாத
நெடுங்காலமாக அம்மலையில் நாள்தோறும் உச்சிப்பொழுதில் இரு கழுகுகள்
வந்து காட்சியளித்தலால் பட்சி தீர்த்தம் என்னும் பெயரும் அதற்கு அமைந்தது.
'கழுகு தொழு வேதகிரி' என்று அருணகிரிநாதர் திருப்புகழில்
இந் நிகழ்ச்சியை பாடியுள்ளார்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment