பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 188                                                                                          இதழ் - ௧
நாள் : 11-01-2026                                                                              நாள் : -0-௨௦௨


இலக்கணம் கற்போம்
 

வஞ்சித்திணை

காஞ்சிப்படலம்

    தன்நாட்டைக் கவருவதற்காகப் பகையரசன் (வஞ்சியரசன்) படையெடுத்து வருவதை அறிந்தான் ஒரு வேந்தன். அப்படைகள் தம் நாட்டிற்குள் வராமல் தடுக்கும் பொருட்டுக் காஞ்சி மறவர்கள் காஞ்சிப் பூவினைச் சூடிக்கொண்டு தம் எல்லையில் நின்று தடுத்துப் போர்ப்புரிவது காஞ்சித்திணை எனப்படும்..

காஞ்சித்திணை துறைகள் மொத்தம்  – 21

1. காஞ்சி எதிர்வு :
வஞ்சிவேந்தன் படையெடுத்துவர அதனைக் கண்ட காஞ்சிவேல் மறவனின் ஆற்றலை 
     மிகுத்துச் சொல்வது.

2. தழிஞ்சி :
வஞ்சியரசனின் படை தம்நாட்டின் எல்லையைத் தொடாதபடி காத்து நிற்பது.

3. படைவழக்கு :
காஞ்சிவேந்தன் தன்படை மறவர்களுக்குத் துணைப் படையை வழங்குவது மற்றும் 
     படைக்கருவிகளைப் பெற்ற மறவன் தன் ஆற்றலைத் தானே புகழ்ந்துக் கூறுவது.

4. பெருங்காஞ்சி :
காஞ்சிமறவர் போரின்கண் தமது மறப்பெருமையை வெளிப்படுத்துவது.
 
5. வாள்செலவு :
காஞ்சி அரசன் தன் வாளைப் போர்களத்திற்கு எடுத்துச் செல்லுமாறுக் கூறியது.

6. குடைசெலவு :
காஞ்சியரசன் தன் குடையைப் போர்களத்திற்கு எடுத்துச் செல்லவிடுவது.

7. வஞ்சினக்காஞ்சி :
காஞ்சி மன்னன் சூளுரைப்பது. உறுதிபட சினந்து கூறுதல்.

8. பூக்கோள்நிலை :
மறவர்கள் தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப் பெறுதல்.

9. தலைக்காஞ்சி :
போர்க்களத்தில் செயற்கரும் செயலைச் செய்து இறந்த மறவனின் தலையைப் பாராட்டுவது.

10. தலைமாராயம் :
ஒரு பகைமறவனின் தலையைக் கொண்டு வந்த காஞ்சிமறவனுக்கு மன்னன் பெரும் 
     பொருளைக் கொடுத்து சிறப்பிப்பது.

இலக்கணம் தொடரும் . . .

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment