பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 137                                                                                               இதழ் - ௧
நாள் : 08 - 12 - 2024                                                                            நாள் :  - ௧ - ௨௦௨௪



பழமொழி அறிவோம்

பழமொழி – 137

“ கெண்டையைப் போட்டு வராலை இழு 

விளக்கம்
சிறிய கெண்டை மீனை உணவாகத் தூண்டிலில் போட்டு பெரிய வரால் மீனை பிடித்தல் என்பது இப்பழமொழிக்குப் பொருளாகும்.

உண்மை விளக்கம்
இந்தப் பழமொழியில் எவ்வாறு சிறிய கெண்டை மீனை உணவாகப் பயன்படுத்திப் பெரிய வரால் மீனைப் பிடிக்கிறார்களோ, அதைப்போலவே ஒருவன் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டுமானால் முதலில் சிறிதாக முதலீடு செய்து அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு பெரிதாக இலாபம் ஈட்ட முற்பட வேண்டும் என்பதைக் குறிக்கவே “கெண்டையைப் போட்டு வராலை இழு“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment