இதழ் - 142 இதழ் - ௧௪௨
நாள் : 19 - 01 - 2025 நாள் : ௧௯ - ௦௧ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 142
“ உறற்பால யார்க்கும் உறும் ”
விளக்கம்
உயர்ந்த குணம் கொண்ட சான்றோர்களுக்கும் சில சமயங்களில் துன்பம் நேரும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
திங்களும் தீங்குறுதல் காண்டுமால் - பொங்கி
அறைப்பாய் அருவி அணிமலை நாட!
'உறற்பால யார்க்கும் உறும்'.
வானத்தில் குளிர்ந்த தன்மையுடன் ஒளி வீசும் நிலவும் கூட சில சமயங்களில் இராகு, கேது போன்ற கிரகங்களால் பாதிக்கப்படுவது இயற்கையாகும். அதுபோல எந்த நிலையிலும் வரக்கூடாத துன்பங்கள் கூட சில சமயங்களில் சிறந்த அறிவுடைய சான்றோருக்கும் வந்துவிடுகிறது. ஏனெனில் அத்துன்பம் விழைவது ஊழ்வினைப் பயனே ஆகும் என்பதை விளக்கவே 'உறற்பால யார்க்கும் உறும்' என்று இப்பழமொழியின் பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment