இதழ் - 103 இதழ் - ௧0௩
நாள் : 14-04-2024 நாள் : ௧௪-0௪-௨௦௨௪
- இனையவும் என்னும் விதியாவது நிலைமொழியின் ஈற்று எழுத்தான உயிர்மெய் கெட்டு வருமொழியின் முதலெழுத்திற்கு இனமான மெய் எழுத்து தோன்றி சேர்வது.
சான்று
பைங்கூழ்
- பைங்கூழ் = பசுமை + கூழ் (ஈறுபோதல் விதிப்படி மை விகுதி நீங்கியது)
- பசு + கூழ் (அடியகரம் ஐயாதல் விதிப்படி நிலைமொழியின் முதல் எழுத்து ‘ப’ காரம் ஏற்று ‘பை’ ஆக மாறியது )
- பைசு + கூழ் (இனையவும் விதிப்படி நிலைமொழியின் ஈற்று உயிர்மெய் எழுத்து ‘சு’ நீங்கியது)
- பை + கூழ் (இனமிகல் விதிப்படி ‘க’ கரத்தின் இன எழுத்தான ‘ங்’ மெய் தோன்றி புணர்ந்தது)
- பைங்கூழ் எனப் புணர்ந்தது.
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment