பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 56                                                                                     இதழ் -
நாள் : 21-05-2023                                                                       நாள் : -0-௨௦௨௩
 
     
 
குறிப்பு வினைமுற்று
 
    குறிப்பு வினையானது செயலைக் குறிப்பாக உணர்த்தும். மேலும் குறிப்பு வினையானது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுவகைப் பெயரின் அடிப்படையாகப் பிறந்து முன்னர் சொல்லிய செய்பவன் முதலாகிய ஆறனுள் கருத்தாவை மட்டும் குறிப்பாய்க் காட்டும்.
 
    பொருள் முதல் ஆறினும் தோற்றி முன்ஆறனுள்
    வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைகுறிப்பே

                                     - நன்னூல். நூற்பா. எண். 321
 
சான்று
    பொருள் - பொன்னன்
    இடம் - தென்னாட்டார்
    காலம் - ஆதிரையான்
    சினை - கண்ணன்
    பண்பு - கரியன்
    தொழில் - எழுத்தன்
 
ஏவல் வினைமுற்று
    முன்னிலையில் நிற்பவரை ஏவுதல் பொருட்டு வரும் வினைமுற்று ஏவல் வினைமுற்று எனப்படும். ஏவல் வினைமுற்று கட்டளைப் பொருளில் மட்டுமே வரும். ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு. முன்னிலைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ஏவல் ஒருமை வினைமுற்றுகள் இ, ஆ, ஆய் என்னும் விகுதிகளைப் பெறும்.

சான்று
      வருதி, செவ்வாய்

ஏவல் வினைமுற்று
    முன்னிலையில் நிற்பவரை ஏவுதல் பொருட்டு வரும் வினைமுற்று ஏவல் வினைமுற்று எனப்படும். ஏவல் வினைமுற்று கட்டளைப் பொருளில் மட்டுமே வரும். ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு. முன்னிலைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ஏவல் ஒருமை வினைமுற்றுகள் இ, ஆ, ஆய் என்னும் விகுதிகளைப் பெறும்.

சான்று
      வருதி, செவ்வாய்
 
ஏவல் பன்மை வினைமுற்றுகள் 
     இன், ஈர், மின், உம் என்னும் விகுதிகளைப் பெற்று வருகிறது.
 
சான்று
    செல்வீர், வருவீர், வாரும்
    நீ, நட, படி விகுதி பெறாத ஏவல் ஒருமை வினைமுற்று.
 
வியங்கோள் வினைமுற்று
  • வாழ்த்துதல், வைதல், வேண்டல், விதித்தல் என்னும் நான்கு பொருள்களில் வரும்.
  • ஒருமை, பன்மை பாகுபாடில்லை.
  • இருதிணை, ஐம்பால், மூவிடத்தும் வரும்.
வியங்கோள் வினைமுற்று விகுதிகளாவன க, இய, இயர்.
 
சான்று
    வாழ்க, வெல்க - வாழ்த்துதல்
    ஒழிக, கெடுக - வைதல்
    வருக, உண்க - விதித்தல்
    அருள்க     - வேண்டல்

ஏவல் வினைமுற்றுக்கும், வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகள்.
 
 
     இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment