இதழ் - 165 இதழ் - ௧௬௫
நாள் : 13 - 07 - 2025 நாள் : ௧௩ - ௦௭ - ௨௦௨௫
இலக்கணம் கற்போம்
பொருள் இலக்கணம்
வாழ்விற்குப் பொருள் தரும் கூறுகளை விளக்கிக் காட்டுவது பொருள் இலக்கணம். பொருள் இலக்கணம் தமிழ் மொழிக்கே உரிய தனிச்சிறப்பு.
தமிழில் உள்ள மிகவும் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணம் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியம் பொருள் இலக்கணத்தை மிகவும் விரிவாகக் கூறுகிறது. தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில், ஐந்து இயல்கள் பொருள் இலக்கணத்தைக் கூறுகின்றன.
தொல்காப்பியத்தைத் தொடர்ந்து, இறையனார் அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், புறப்பொருள் வெண்பாமாலை, களவியல் காரிகை, நம்பியகப்பொருள் விளக்கம், மாறன் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்கள் பொருள் இலக்கணம் கூறும் நூல்கள். மேலும் ஐந்திலக்கணத்தையும் தெரிவிக்கும் நூல்களிலும் பொருள் இலக்கணம் இடம்பெற்றுள்ளது.
பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும்.
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment