இதழ் - 43 இதழ் - ௪௩
நாள் : 19-02-2023 நாள் : ௧௯-0௨-௨௦௨௩ ஒரு பெண் தன் கணவனை கல்லிற்கும் புல்லிற்கும் ஒப்பிட்டுப் பார்த்து, கணவன் எத்தகைய நிலையில் இருந்தாலும் அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் இப்பழமொழிக்குத் தவறாகப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
உண்மை விளக்கம்
”கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்“
இங்கு கல், புல் என்பது கல்லையும் புல்லையும் குறிக்கவில்லை. கள்வன் என்பது மருவி கல் என்றும் புலையன் என்பது மருவி புல் என்றும் நாம் பயன்படுத்தி வருகிறோம்.
ஒரு பெண் தன் திருமணத்திற்குப் பின் தன் கணவன் கள்வனாக (திருடன்) இருந்தாலும், புலையனாக (தீயவன்) இருந்தாலும் அவனை ஒதுக்கிவிடாமல் தன் நல்மொழியால் (அன்பால்) அறிவுரை கூறி நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்பதையே ”கள்வனானாலும் கணவன் புலையனானாலும் புருஷன்“ என்ற இப்பழமொழி நமக்குப் பொருள் உணர்த்துகிறது.
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment