இதழ் - 141 இதழ் - ௧௪௧
நாள் : 12 - 01 - 2025 நாள் : ௧௨ - ௦௧ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 141
“ இது என் குலாசாரம், இது என் வயிற்றாசாரம் ”
விளக்கம்
குயவன் ஒருவன் தன் பானையை விற்க இப்பழமொழியைப் பயன்படுத்தியதை நாம் அறியலாம்.
உண்மை விளக்கம்
இங்கு “இது” என்பது குயவன் ஒருவன் விபூதியால் நெற்றியில் பட்டையும் வயிற்றில் நாமத்தையும் இட்டுக்கொண்டதைக் குறிக்கிறது.
ஸ்ரீரங்கத்தில் உள்ள வைணவர்கள் அந்த ஊரில் உள்ள குயவர்களிடம் நீங்கள் நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டால் மட்டுமே நீங்கள் வணைந்த பானையை நாங்கள் வாங்கிக் கொள்வோம் என கூறுகின்றனர்.
இதனால் குழம்பிய அவ்வூர் குயவர்கள் செய்வதறியாது திகைத்தனர். அதில் ஒரு புத்திக்கூர்மையுள்ள குயவர், விபூதியால் நெற்றியில் பட்டையும் வயிற்றில் நாமத்தையும் இட்டுக்கொண்டு விற்பனைக்குச் சென்றார். இதைக்கண்ட அந்த ஊர் வைணவர்கள் அந்தக் குயவரிடம் சண்டைக்குச் சென்றனர்.
அப்போது அந்தக் குயவர் வைணவர்களிடம் “இது என் குலாசாரம், இது என் வயிற்றாசாரம்” என்று கூறியுள்ளார். அதாவது நெற்றியில் உள்ள பட்டை என் குலாசாரம் என்றும் வயிற்றில் உள்ள நாமம் என் வயிற்றாசாரம் என்றும் விளக்குவதற்காக இந்தப் பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment