இதழ் - 79 இதழ் - ௭௯
நாள் : 29-10-2023 நாள் : ௨௯-௧0-௨௦௨௩
வெண்ணி
சோழ நாட்டை ஆண்ட ஆதி அரசருள் தலை சிறந்தவன் திருமாவளவன் என்னும் கரிகாற் சோழன். அம்மன்னனது கொற்றத்திற்குக் கால்கோள் செய்த இடம் வெண்ணிப் போர்க்களம்.
சேரனும் பாண்டியனும் சேர்ந்து கரிகாலனை அழிக்கக் கருதி, பெரும் படை எடுத்தனர். சோழ நாட்டில் நேசச் சேனை வெள்ளம் பரந்து பாய்ந்தது. அது கண்ட சோழன் படை உருத்தெழுந்து மாற்றாரை எதிர்த்தது. வெண்ணி என்னும் ஊரில் இரு திறத்தார்க்கும் நிகழ்ந்த கடும் போரில் பாண்டியன் விழுந்து உயிர்த் துறந்தான். நேசப் படை நிலை குலைந்து ஓடிற்று. அந்நிலையில் கரிகாலன் விட்ட அம்பு, சேர மன்னன் முதுகில் தைத்தது. மானமழிந்த சேரன் உண்ணா நோன்பிருந்து உயிர்த் துறந்தான். வெற்றி மாலை சூடிய கரிகாலன் அன்று முதல் மூன்று தமிழ் நாட்டையும் ஒரு குடைக் கீழ் ஆளத் தொடங்கினான். இங்ஙனம் கரிகாலச் சோழன் வெண்ணியிற் பெற்ற வெற்றியைப் தமிழ்ப் புலவர்கள் பாட்டில் அமைத்தனர்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment