இதழ் - 191 இதழ் - ௧௯௧
நாள் : 15 / 02 / 2026 நாள் : ௧௫ / 0௨ / ௨௦௨௬
புதுக்கோட்டை நாட்டில் குடுமியா மலை என்னும் மலை ஒன்று உண்டு. அம்மலை திருநலக்குன்று என்று சாசனங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அங்குத் திருமேற்றளி முதலாய சிவாலயங்கள் உள்ளன. குன்றின் சிகரத்தைக் குடுமி என்னும் சொல் உணர்த்துவதாகும். எனவே, குடுமியான் என்று அக்குன்றுடைய பெருமான் குறிக்கப் பெற்றார். நாளடைவில் பழம்பெயர் மறைந்து குடுமியான் மலை என்ற பெயர் வழங்கலாயிற்று. மலைக் குடுமியைத் தலைக் குடுமியெனப் பிறழவுணர்ந்த பிற்காலத்தார் சிகாநாதர் என்று அங்குள்ள ஈசனை அழைக்கலாயினர்.
குன்றக்குடி
பாண்டி நாட்டில் ஒரு குன்றின் அடிவாரத்தில் அமைந்த ஊர் குன்றக்குடி என்று பெயர் பெற்றது. அங்கு எழுந்தருளியுள்ள ஈசன், திருமலையுடையார் எனவும், தேனாற்று நாயகர் எனவும் சாசனங்களில் குறிக்கப்படுகின்றார். தேனாற்று நீர் பாயும் ஊர்களில் குன்றக் குடியும் ஒன்றாதலால் அங்குள்ள இறைவன் அப்பெயர் பெற்றார். பழங்காலத்துப் பாண்டியர்கள் அக்கோயிலுக்கு விட்ட நிவந்தங்கள் பலவாகும். இப்பொழுது அவ்வூரின் பெயர் குன்னக்குடி யென மருவி வழங்குகின்றது; அக்குன்றப் பகுதியில் அமர்ந்த குமரவேலை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment