பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 88                                                                                                     இதழ் - 
நாள் : 31-12-2023                                                                                        நாள் : --௨௦௨௩

 
குற்றியலுகரப் புணர்ச்சி

குற்றியலுகரப் புணர்ச்சி (நெடில் தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்)

நெடில் தொடர்க் குற்றியலுகரம்
  • டகரம் (ட்) ஊர்ந்து வரும் நெடில் தொடர்க் குற்றியலுகரம், வருமொழியோடு இணையும்போது, அவை ஊர்ந்து வரும் ஒற்று இரட்டித்துப் புணரும்.
சான்று
  • வீடு + தோட்டம் = வீட்(ட் + உ) + தோட்டம் = வீட்டுத்தோட்டம்
  • காடு + மரம் = காட் (ட் + உ) + மரம் = காட்டு மரம்
  • பகடு + வாழ்க்கை = பகட்டு வாழ்க்கை
  • முரடு + காளை = முரட்டுக்காளை

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
  • றகரம் (ற்) ஊர்ந்து வரும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம், வருமொழியோடு இணையும் போது, அவை ஊர்ந்து வரும் ஒற்று இரட்டித்துப் புணரும்.
சான்று
  • சோறு + பானை = சோற்றுப்பானை
  • ஆறு + நீர் = ஆற்றுநீர்
  • வயிறு + பசி = வயிற்றுப்பசி
  • கயிறு + வண்டி = கயிற்றுவண்டி
      “நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள்
       டறஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே” 
                                  - நன்னூல் நூற்பா. எண். 183

     தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...

 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment